1.0  அறிமுகமும் இத்திட்டத்தின் தேவையும்:

முன்பொரு காலம் இருந்தது வலுக்கட்டாயமாக மாணவர்களை பாடசாலையில் சேர்த்து கல்வி புகட்டுவது, இது சில நல்உள்ளங்களின் தூண்டுதல் அர்ப்பணிப்போடு இடம்பெற்றது. இப்போது சகலரிடமும் உள்ள விழிப்புணர்வின் காரமாணமாக ஒவ்வொரு மாணவனும் கட்டாயக் கல்வியினை பெற்றுக்கொள்ள வேண்டியது கடமையாகவும் ஒவ்வொரு பெற்றோரின் ஆதங்கமாகவும் இருந்து வருகிறது.

அந்த வகையில் ஐனவரி மாதத்தொடக்கத்தில் புதிய மாணவர்கள் பாடசாலைக்கு பல கனவுகளுடன் செல்லத்தயாராக இருக்கிறார்கள்.

சிறுபராயம் என்பது புதுமைகளை கண்டு வியக்ககூடியது. முதல் நாள் எல்லா மாணவர்களின் மனதிலும் ஓர் ஏக்கம் இருக்கும். புதிய வகுப்பில் புதிய மாணவ நண்பர்களுடன் புதிய பாடப் புத்தகங்கள் , பயிற்சிப் புத்தகங்கள், புதிய ஆடை அணிகலன்கள், புத்தகப்பை, புதிய சப்பாத்து அணிந்து செல்ல வேண்டும் என்று எல்லோருமே ஆசைப்படுவார்கள். ஆனால் இந்த சிறு ஆசையினை நிவர்த்தி செய்ய முடியாமல் எமது சம்மாந்துறையின் சில பெற்றோர்கள் இருந்து வருகிறார்கள் என்பதை நாம் அறிவோம். பாடசாலையின் புதிய வகுப்பு முதல் முதலாக பிஞ்சு பருவங்கள் வேற்றுமை மறந்து ஓர் இடத்தில் ஒன்றிணையும் தருணம் இது. சகமாணவர்களைப் போலவே நாமும் என்ற எண்ணம் விதைக்கப்படும் பிஞ்சுப்பருவம். அதனை உறுதிப்படுத்தவே அரசாங்கம் சீருடை , சம கல்வி வழங்குகிறது ஆனால் பயிற்சிப்புத்தகம், புத்தகப்பை, சப்பாத்து சில மாணவர்களின் கனவு ஆசையாக இருந்து வருகிறது.

2.0  திட்டத்தின் தலைப்பு :

புன்னகையுடன் பாடசாலைக்கு 2018

 

3.0  திட்டத்தின் நோக்கங்கள்:

சக மாணவர்கள் எல்லோரும் புதிய ஆடை அணிகலன்களுடன் பாடசாலைக்கு வருகை தரும் போது தான் மட்டும் அதே பழைய ஆடையுடன்  செல்வதை எண்ணி அம்மாணவர்களிடையே ஒருவித உளவியல் தாழ்வுச்சிக்கல் ஏற்பட்டு பாடசாலை செல்லும் விருப்பத்தையும் கற்கவேண்டும் என்ற ஆர்வத்தையும் அந்த பிஞ்சு உள்ளம் வெறுப்பு கொள்கிறது.
பாடசாலை செல்லும் மாணவர்களை நாம் அவதானித்தால் எத்தனையோ மாணவர்கள் கிழிந்த புத்தகப்பை, சப்பாத்து இல்லாமல் பாடசாலைசெல்வது, அழுக்கு ஆடை என நாம் அவதானிக்கிறோம் ஒரு சிலர் வீட்டு நிலமைக்காக பல மனவருத்தங்களோடு செல்கிறார்கறார்கள் இன்னும் சிலரோ வறுமையினால் கல்வியினை இடை நடுவில் விடுகிறார்கள்.
சிறுபராய மாணவர்களை ஊக்குவிப்பதன் அவசியம் உணரப்பட்டு பலராலும் மாணவர்களுக்கு இலவச புத்தகப்பை, சப்பாத்து, பயிற்சி நூல்கள் வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இது நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படுவதால், இந்தத்தருணத்தில் எமதூர் மாணவர்களை நாம் உட்சாகப்படுத்த வேண்டியது எமது கடமையல்லவா?
நாமும் இந்தபருவத்தையும் இந்த அவமானத்தையும் கடந்து வந்தவர்களாக கூட இருக்கலாம்… எமது சந்ததிகளும் அவ்வாறு இருப்பதற்கு நாம் இடமளிப்பதா??? எம் உழைப்பில் ஒரு ஏழை மாணவனுக்கு உதவுவது எமக்கு கிடைக்கும் ஒரு மாபெரும் பாக்கியம். ஏழையின் கல்விக்கு உதவிட எல்லோருக்கும் வாய்ப்புக்கள் கிடைப்பதில்லை, எமக்கு கிடைக்கும் இந்தவாய்ப்பின் மூலம் ஏழையான மாணவர்களின் கல்விக்கு உதவிட முன்வருவோம். 

4.0 நடை முறைப்படுத்தும் முறை:
குறைந்த விலைத் தெரிவின் மூலம்
1- புத்தகப்பை
2- பயிற்சி நூல்கள்/அப்பியாசக் கொப்பி
3- பென்சில், கலர் பென்சில் அடங்கிய பொதி பெறுமதி -1,500/= இனுள் அமைந்ததாக இருக்கும்.

வசதி குறைந்த பிரதேச பாடசாலைகளின் அதிபரின் சிபாரிசும் பள்ளி நிருவாகத்தின் சிபாரிசுக்கமைவாக புதியமாணவர்களை தெரிவு செய்து வலயகல்விப் பணிப்பாளரினூடாக பொது நிகழ்வின் மூலம் ஒத்துழைப்பு வழங்கும் சகல அமைப்புகளின் பிரதிநிதிகளால் இணைந்து வழங்கிவைத்தல்

5.0 திட்டத்தின் மூலம் எதிர்பார்க்கப்படும் அடைவுகள்:

1- சகலருக்கும் கல்வி சம உரிமையோடு பெறப்படுவதை உறுதி செய்தல்
2- தாழ்வு மனப்பான்மையில் இருந்து மாணவ சமூகத்தை பாதுகார்த்தல்.
3-ஏழ்மை கல்விக்கு தடையாக இருக்காது என்பதை மாணவர்களிடம் உணர்த்தல்
4-பின் தங்கிய பிரதேச மாணவர்களை பாடசைகளுக்கு செல்வதற்கு ஆர்வமூட்டல்.
5- பிறரது துயரத்தை துடைத்து இறைவனின் திருப்தியை பெற்று கொள்ளல்.
6- சகல அமைப்புகளை இணைத்து ஒற்றுமையின் பலத்தை நிருபிப்பதோடு இணைந்த பொது செயற்பாட்டை ஊக்குவித்தல்.

6.0  திட்டத்தை நடை முறைப்படுத்துவதற்கான நிதித்தேவை

1- புத்தகப்பை – 900/=

2- பயிற்சி நூல்கள் – 350/=

3- பென்சில், கலர்பென்சில் அடங்கிய பொதி – 250/=

ஒரு மாணவனுக்கான உதவிப்பொதியின் பெறுமதி 1,500/=. இன்ஷா அல்லாஹ் 300 மாணவர்களுக்கு வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது ஆகவே மொத்தமாக 450,000/= நிதி அவசியப்படுகிறது.

7.0  நிதி சேகரிப்பு முறைமையும் திட்ட அமுல்படுத்தலும்

இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு எமது அமைப்பு சமூக அமைப்புக்கள், நிறுவனங்கள், நன்கொடையாளர்கள் சகலரது ஒத்துழைப்புக்களையும் எதிர்பார்க்கின்றது.  
இத்திட்டம் SWDC Council இன் மேற்பார்வையில்,  எமது Welfare Development Sector and Education Development  இன் ஒழுங்கமைப்பில் நிறைவேற்றப்படும். ஒத்துழைப்பு வழங்கும் அமைப்புக்கள் மற்றும் நிருவனங்களின் அனுசரனையிலும் அவர்களின் பங்களிப்புடனும் பொதிகள் வழங்கி வைக்கப்படும்.

நிதியானது எமது அமைப்பின் கணக்கில் சேகரிக்கப்படும்.

அமைப்பின் கணக்கு விபரங்கள் :

பெயர்:  AL Joufer Sadique / MTM Bawa / MM Ansar

கணக்கிலக்கம்: 011 0292444 001

வங்கி : அமானாவங்கி (Amana Bank, Sammanthurai)

கிளை: சம்மாந்துறை

ஸ்விப்ட்இலக்கம் : Amana LXLK

வங்கிவிலாசம் : ஹாஜியார்பலஸ், ஹிஜ்ராசாந்தி, அம்பாறைவீதி, சம்மாந்துறை, ஸ்ரீலங்கா.

வைப்பிலிடப்பட்ட பின் அறிவிக்க தொடர்பு கொள்ளவும்

M Farwish – +94 776367585

அத்துடன் பொருட்களை நேரடியாக சமர்ப்பிக்க விரும்புபவர்கள், கீழ்வரும் விலாசத்திலுள்ள அமைப்பின் அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம்,

SAMMANTHURAI WELFARE & DEVELOPMENT COUNCIL

மே/பா A.L. Joufer Sadique

இலக்கம் : 11,பசார் 09ம்வீதி,சம்மாந்துறை,ஸ்ரீலங்கா .

வெளி நாட்டின் நன்கொடையாளர்களின் நிதியானது அப்பிராந்திய Coordinators ஊடாக பெற்றுக் கொள்ளப்படும்

Qatar : S.I.M Buhari  (Maulavi) SWDC Qatar coordinator,  Contact no +97455385330.

Bahrain :  M.A.M. Nafees-SWDC Bahrain coordinator,  Contact no . +97335346110 

UAE: Mr M.I.M Shibly – SWDC – SGA president 

Saudi Arabia: As Shiek Aslam, SWDC KSA coordinator,Contact no. +966530176997

 

8.0 பங்களிப்புச் செய்யும் சமூக சேவை அமைப்புக்கள்

எமது ஊரில் நலன் சார்ந்த மற்றும் பிற நன்கொடை வழங்கும் நிருவனங்களிடம் எமது திட்டத்தை முன்வைத்து அவர்களின் ஒத்துழைப்பினை பெறல்.

Share this