எம்மை பற்றி – About Us

Find Us On FaceBook

நமக்கு ஏன் சம்மாந்துறை நலன்புரி மற்றும் அபிவிருத்திப் பேரவை அவசியம்?

சம்மாந்துறை வாழ் உள்ளங்களே !!!

நாம் அனைவரும் சம்மாந்துறைத் தாய் பெற்றெடுத்த சகோதர்கள். நாமும் நமது மூதாதையர்களும் அடிப்படையில் விவசாயிகள். நமது உள்ளங்களோ எப்போதும் பண்பட்ட உள்ளங்கள். நம்மிடையே பல்வேறு துறைகளில் பாண்டித்தியம் உள்ளவர்கள் இருக்கலாம், பல சமூக அந்தஸ்த்தில் இருக்கலாம், அதே போன்று வேறுபட்ட கருத்துகளிலும் கொள்கைகளிலும் கூட இருக்கலாம், ஆனாலும் நாம் எப்போதும் சகோதரர்கள் எனும் அடிப்படையில் ஒற்றுமைப்பட வேண்டிய தருணத்தில் இருக்கிறோம்.

சம்மாந்துறை இலங்கையிலுள்ள ஊர்களில் முஸ்லிம் பெரும்பான்மை கொண்ட மிக முக்கியமான பிரதேசங்களிலொன்றாகும். இயற்கை வளங்களும், விவசாயமும், கேந்திர முக்கியத்துவமிக்க அமைவிடமும் கொண்ட நமது ஊர்.  பல ஆன்மீக வழிகாட்டிகள், பல்துறை அறிஞர்கள், எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள், சிறந்த சேவை மனப்பான்மையுடையவர்கள், செல்வந்தர்கள், கொடையாளிகள், தொண்டர்கள், இஸ்லாமிய இயக்கங்கள், பலநூறு சமூக சேவை நிறுவனங்கள் மற்றும் நம்பிக்கையாளர்சபை, மஜ்லிஸ் அஷ்ஷூரா என்று அருட்கொடைகளைத்  தம்வசம் கொண்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்!

இவ்வாறு பல வளங்கள் இருந்த போதிலும், இன்று நமது ஊர் பல வழிகளில் களையிழந்துள்ளதோடு  சீரழிந்தும் பின்னடைந்தும் காணப்பட்டு வருகின்றதை சிந்தையிற் கொண்டு சமூக சிந்தனையாளர்கள் என்ற வகையில் நாம் மிகுந்த மனவேதனையடைகிறோம்.

உதாரணமாக

 • ஆன்மீக வறுமை

 • ஒழுக்கச்சீர்கேடு

               – பெற்றோர்/முதியோர் புறக்கணிப்பு

               – ஆசிரியர் அவமதிப்பு

               – சிறுவர் துஷ்ப்பிரயோகம்

               – மது, சூது மற்றும் விபச்சாரம்

 • திருமண முறைகேடுகள் மற்றும் தலாக்

 • வறுமை

 • பாடசாலைக் கல்வியில் மந்தபோக்கு மற்றும் குறைவான பல்கலைக்கழக தெரிவு

 • தொழில் தர்மமின்மை மற்றும் ஹறாமான உழைப்பு

 • சூழல் மாசடைவு மற்றும் திட்டமிடப்படாத அபிவிருத்தி

 • சுகாதாரச் சீர்கேடு

 • துறை சார் நிபுணர்களின் பற்றாக்குறை

​போன்ற பல்வேறு வகையான குறைபாடுகளுடன் நமது ஊர் காணப்படுகிறது. ஆகவே இந்த நிலையில் சமூக சிற்பிகளான எமதூரின் புத்திஜீவிகளாகிய நாம் இவ்விடயம் தொடர்பில் சிரத்தையுடன் சிந்தித்தாக வேண்டியது நமது கடமையும் பொறுப்புமாகும். அதாவது

1.நமது தற்கால கல்வி மற்றும் கலாச்சார சூழல் என்ன?

2.நமது இளையவர்களின் கல்வியும் பண்பாடுகளும் எவ்வாறுள்ளது? இவர்களுக்கும் ஆசிரியர் மற்றும் பெற்றோர்களுக்குமான தொடர்புகள் எவ்வாறு உள்ளன?

3.நமது குழந்தைகளுக்கு நாம் எவ்வாறான எதிர்கால சூழலை அமைத்துக்கொடுக்க இருக்கின்றோம்?

போன்ற வினாக்களிற்குநாம் விடைகாணவேண்டிய நிர்பந்தத்தில் இருக்கின்றோம்.

ஏனெனில்

நிச்சயமாக நமக்குக் கொடுக்கப்பட்ட காலம், அறிவு, செல்வம் மற்றும் அதிகாரம் அனைத்தும் சோதனையாகும். இறைவனிடம் இவற்றிற்கு நாம் பொறுப்புக் கூற வேண்டும்.

சகோதரர்களே! நமது இஸ்லாமிய மார்க்கம் ஒரு சம்பூரணமான திட்டமிடப்பட்ட வாழ்க்கை வடிவமாகும், இது வெறும் ஐந்து கடமைகளுடன் குறுகியதன்று. இஸ்லாமிய வழிகாட்டுதல்கள் நமது வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சங்களிலும் பிரதிபலிக்கச் செய்யப்படவேண்டும். எனவே நமது வாழ்கை முழுமை பெறுவதற்கு நமது செயற்பாடுகள் அனைத்தும் திட்டமிடப்பட்டு நல்லெண்ணத்துடன் இபாதாவாக்கப்பட வேண்டும். அதுவே சிறந்த உம்மத்தின் பணியாகும்.

இந்தப் பணி தனி மனித உருவாக்கத்தில் ஆரம்பித்து, குடும்பம் மற்றும் சமூகத்தை நோக்கி நகர்த்தப்பட வேண்டும். அப்போதுதான் அது இலட்சியமான சமூகக்கட்டமைப்பிற்கு சரியானதும் உறுதியானதும் முன்னேற்றகரமானதுமான செயற்பாடாக அமையும்.

சகோதரர்களே! மேற் குறிப்பிட்டது போன்று நமது ஊரில் சமூகப் பணிகளுக்காக பல நூறு சமூக நிறுவனங்கள், கொடையாளிகள் மற்றும் தொண்டர்கள் என பலபேர் பல நன்நோக்கங்களோடு பணியாற்றுகின்றனர். இருந்த போதிலும் நமது அடைவுகள் நமது எதிர்பார்ப்பைக் கிட்டவில்லை என்பது சிந்திக்கவேண்டிய விடயமாகும்.

இவ்விடயங்கள் தொடர்பாக நமது புத்திஜீவிகளால் மிகப்பிரதானமாக அவதானிக்கப்பட்டு அடையாளங்காணப்பட்ட குறைபாடுகள் சிலவற்றை முன்வைக்கின்றோம்.

1.0 ஒற்றுமையின்மை

2.0 சரியான திட்டமிடலின்மை

3.0 தூர நோக்கற்ற போக்கு

4.0 குறுகிய மனப்பாங்கு

5.0 சுய நலம் கொண்ட சமூகசேவை

6.0 சமூக சேவையில் போட்டி மனப்பான்மை

எனவே இவ்வாறான குறைபாடுகளுடன் நாம் சமூக சேவை செய்யும் போது நமது அடைவுகளும் மிகக்குறைவானதாகவே இருக்கும். அத்தோடு முழுமையான பிரதிபலனும் கிடைக்காமல் போகும்.

அபூ மூஸா அல் அஷ் அரீ(ரலி) அறிவித்தார்

இறை நம்பிக்கையாளர்கள் ஒருவருக்கொருவர் (ஒத்துழைக்கும் விஷயத்தில் ) ஒரு கட்டடத்தைப் போன்றவர்கள் ஆவர். கட்டடத்தின் ஒரு பகுதி மற்றொரு பகுதிக்கு வலு சேர்க்கின்றதுஎன்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். பிறகு தம் கைவிரல்களை ஒன்றோடொன்று கோர்த்துக் காண்பித்தார்கள் (புஹாரி – 6026)

சம்மாந்துறை ஊரின் சிறந்த தன்னார்வ சமூக சேவகர்களையும், மார்க்க அறிஞர்களையும், நன்மதிப்புள்ளவர்களையும், நிருவாக திறமை மிக்க புத்தி ஜீவிகளையும், இணைத்து ஒரு முகப்படுத்தி ஒரே குடையின் கீழ் (Common Platform இல்) இயங்கக் கூடிய வகையில் கட்டமைக்கப்பட்டதே ”சம்மாந்துறை நலன்புரி மற்றும் அபிவிருத்தி பேரவை (Sammanthurai Welfare & Development Council)” கட்டமைக்கப்பட்டுள்ளது. பல மாதகால திட்டமிடல், கலந்துரையாடல்கள் மற்றும் பல அமைப்புகளின் ஒன்றிணைந்த முயற்சியின் மூலம் இதற்கான தேவை முன்வைக்கப்பட்டதோடு அதிஉயர்பீட SWDC உறுப்பினர்களும் தெரிவுசெய்யப்பட்டு 2017/04/09 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.

About Us

அதாவது நமது இலக்கு
பல்துறை நிபுணத்துவமுள்ள அழகிய செல்வம் செழிக்கும் ஒற்றுமையுள்ள ஊரை கட்டியெழுப்புதல்

எனும் ஒரு தொனிப்பொருளில் அழகிய ஆக்கபூர்வமான நிறுவனமயப்படுத்தப்பட்ட வேலைதிட்டங்களை இன்ஷா அல்லாஹ் முன்னெடுப்பதாகும்.

எனவே அன்புள்ள சகோதர்களே! இதற்காக நாம் உங்களின் பூரண ஓத்துழைப்புகளை வேண்டி நிற்கின்றோம், இன்ஷா அல்லாஹ்! நாம் அனைவரும் சகோதரர்கள், வாருங்கள் ஒரே குடையின் கீழ் ஒன்றுதிரள்வோம், திட்டமிடுவோம், அமுல்படுதுவோம். அணிதிரளுங்கள் அனைவரும் ஒன்றாக நம் சமூகத்தைக் கட்டியெழுப்புவோம்.

இன்றே ஒன்றாவோம்!
நாளை வென்றாவோம்!

நீங்கள் அனைவரும் மேய்ப்பாளர்கள் உங்களது மேய்ப்புப் பற்றி நாளை மறுமையில் விசாரிக்கப்படும்

 

நம் அனைவரினதும் நல் எண்ணங்களையும் செயற்பாடுகளையும் வல்ல அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக!

ஆமீன்!

நன்றி.

SWDC இன் கட்டமைப்பு

SAMMANTHURAI WELFARE & DEVELOPMENTCOUNCIL (SWDC)

இதன் கட்டமைப்பு 3 நிலைகளை கொண்டது

1 – Supreme Council Members

2 – Sector Committee Members

3 – General Members

 

SWDC இன் Supreme Council Members 33 அங்கத்தவர்களையும் கொண்டதோடு இதில் 12 அபிவிருத்தி பிரிவுகளையும் உள்ளடக்கி உள்ளது.

1.Education Development Sector

2.Welfare Development Sector

3.Culture Development Sector

4.Health Development Sector

5.Infrastructure Development & Quality Monitoring Sector

6.Agriculture and Irrigation Development Sector

7.Personality Development Sector

8.Sports Development Sector

9.Business and Economic Development Sector

10.Environment & Disaster Management Sector

11.Legal Affairs Sector

12.Financial investment Development Sector

Sector Committee Members

ஒவ்வொரு அபிவிருத்தி பிரிவுகளும் 15 Units Committee Members களை உள்ளடக்கியதாக காணப்படும்.

இதன் கட்டமைப்பு

General Members

இந்த அபிவிருத்தி குழுக்களின் திட்டமிட்ட செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதர்க்கான General Members பொது அங்கத்தவர்கள் காணப்படுவார்கள். இவர்கள் தனி அங்கத்தவர்களாகவோ, சமூக சேவை நிருவனங்களாகவோ இருக்கலாம்.

எமது எதிர்காலத்தை தீர்மானிப்பவர்கள் நாமாக இருப்பதால் இன்றே செயற்பட வேண்டிய தேவை எம்மிடத்தில் காணப்படுவதை சகலரும் உணர்ந்து உள்ளோம், இது செயற்படுவோருக்கு முன்னுரிமை வழங்கப்படும் அமைப்பாகவும் சகல வேற்றுமைகள் களைந்து இயங்க நாம் உறுதி மொழி எடுத்தவர்களாக இணைந்து உள்ளோம். எனவே அன்புள்ள சகோதர்களே இதற்காக உங்கள் பூரண ஓத்துழைப்பை வேண்டி நிற்கின்றோம், இன்ஷா அல்லாஹ் நாம் அனைவரும் சகோதரர்கள், வாருங்கள் ஒரே குடையின் கீழ் ஒன்று திரள்வோம், திட்டமிடுவோம், அமுல்படுதுவோம். அணி திரளுங்கள் அனைவரும் ஒன்றாக நமது சமூகத்தைக் கட்டியெழுப்புவோம்

பொது அங்கத்தவர்களாவதற்கான அழைப்பு.

அனைத்து இஸ்லாமிய சகோதர்களுக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு.

அல்ஹம்துலில்லாஹ் எமது  SWDC ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து தனது செயற்பாடுகளை வெற்றிகரமாகவும் திட்டமிடப்பட்ட அடிப்படையிலும்  அல்லாஹ்வின் கிருபையால் நடாத்தி வருகின்றது. எமது ஒற்றுமையே எமது பலம் என்பதன் அடிப்படையில் நாம் அனைவரும் இதன் உருவாக்கத்தில் பங்காளிகள் என்பதில் எந்த மாற்று கருத்துக்களும் இல்லை. இந்த அடிப்படையில் அதியுயர் பேரவை (Supreme Council), அபிவிருத்தி பிரிவு அங்கத்தவர்கள் (Development Sector Members) ஆகியவற்றில் உள்வாங்கப்படுவதற்கான தகுதிகள் நம் அனைவரிடமும் இருப்பதை  இனங்கண்டிருந்தோம். இருந்தும் குறிப்பிடத்தக்க நபர்களை மாத்திரமே எம்மால் உள்வாங்கக் கூடியதாக இருந்தது. எமது தெரிவினை சகலரும் ஆமோதிப்பீர்கள் என நாம் நம்புகின்றோம்.

எமது முதலாம் கட்ட நடவடிக்கையாக Supreme Council அங்கத்தவர்களின் தெரிவும், இரண்டாம் கட்ட நடவடிக்கையாக ஒவ்வொரு துறைகளுக்கும் 15 அங்கத்தவர்களின் தெரிவும் நடைபெற்றிருந்தது. அல்ஹம்துலில்லாஹ் நாம் எதிர் பார்த்ததை விட உற்சாகமாக அனைத்து துறை அங்கத்தவர்களும் செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இருந்தும் எமது அமைப்பின் செயற்பாட்டினை முன்னெடுத்துச் செல்வதன் பிரதான ஆணி வேராகக் கருதும் பொது அங்கத்தவர்களாக (General Member) செயற்படுவதற்கு நாங்கள் அனைவரது ஒத்துழைப்பினையும் வேண்டிக் கொள்கிறோம். இது வரை காலமும் Str Development Council ஆக இருந்த நாம் உத்தியோக பூர்வமாக SWDC ( Sammanthurai Welfare and Development Council ) இன் General Member ஆக இணைத்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றோம்.

அதனடிப்படையில் எம்மிடையே அறிமுகத்தை ஏற்படுத்தவும் மற்றும் அரசாங்கத்தில் பதியப்பட்ட அமைப்பு என்பதன் அடிப்படையிலும் தனது அங்கத்தவர்களின் தகவல் கோவையினை பெற்றுக்கொள்ளும் முகமாக அங்கத்துவ படிவத்தினை பூரணப்படுத்தித் தருமாறு அன்பாய் வேண்டிக்  கொள்கிறோம்.

*எமது பொது அங்கத்தவர்களாக இணைந்து கொள்வதால் ஏற்படும் நன்மைகள்*

    • சம்மந்துறையின் மறுமலர்ச்சிக்கான  சமூக அபிவிருத்தி பணிகளில்           பங்குதாரர் ஆகுதல்.

 • நீண்ட மற்றும் குறுகிய காலச் செயற்ப்பாட்டுத் திட்டங்களை (Project Proposal ) முன்வைக்க முடியும்.

 • எம்மால் முன் வைக்கப்படும் செயற்பாட்டுத் திட்டங்களில் பொருள், உடல், சிந்தனை ரீதியாக பங்களிப்புகளைச் செய்யமுடியும்.

 • எமது செயற்பாடுகள் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள முடியும்.

 • வாருடாந்த பொதுக் கூட்டத்தில் பங்கு கொள்ளுதல்.

 • SWDC வெளியிடப் படும் வருடாந்த சஞ்சிகைளை இலவசமாக பெற முடியும்.

 • Sector Member மற்றும் Supreme Council இல் ஏற்படும் வெற்றிடங்களுக்கும் பரிந்துரைக்கப்பட முடியும்.

 • பொது அங்கத்தவர்களாக இணைந்து கொள்ளும் சமூக சேவை அமைப்புகள் SWDC இன் செயற்பாடுகளுக்கும் தங்களால் முடியுமான உதவிகளை எவ்வகையிலும் செலுத்த முடியும்.

  அதே வேளை அவ்வமைப்புகளின் சமூக நல திட்டங்களுக்கு SWDC தனது பூரண ஒத்துழைப்பினையும் வழங்கும் அத்தோடு அவ்வமைப்பின் தனித்துவமான அடையாளம் பாதுகாக்கப்படும்.இது அரச சார்பற்ற சுயாதீன அமைப்பு என்பதால் இதன் செயற்பாடுகளை வெற்றிகரமாக முன்னெடுப்பதில் சகலரது ஒத்துழைப்பினையும் வேண்டிக் கொள்கிறோம். எமது வளங்களை அதி உச்சமாகப் பயன்படுத்துவதன் மூலம் எமது அபிவிருத்திப் பணிகளை நாமாகவே தன்னிறைவு கண்டுகொள்ள முடியும். ஆகவே எமது பாரிய வளமாக கருதும் எமது சமூகத்தின் உதவியினை SWDC வேண்டிக்கொள்கின்றது.இதற்காக வருடாந்த அங்கத்துவக் கட்டணமாக 500/= (ஸதகதுல் ஜாரியா) பெறுவதற்க்கும் எமது Supreme Council உத்தேசித்துள்ளது. இன்ஷா அல்லாஹ்.

  SWDC General Membership Registration


  Culture Development Sector
  Education Development Sector
  Health Development Sector
  Welfare Development Sector
  Infrastructure Development & Quality Monitoring Sector
  Agriculture and Irrigation Development Sector
  Personality Development Sector
  Environment & Disaster Management Sector
  Sports Development Sector
  Business and Economic Development Sector
  Legal Affairs Sector
  Financial investment Development Sector

நூலகத்துக்கான (Libray) ஆக்கங்கள் கோரல்

எமது ஊரின் படைப்புக்களையும் ஆவணங்களையும் பாதுகாக்கும் நோக்கிலும் சகலருக்கும் பயனடையும் விதத்திலும் அவற்றினைஆவணப்படுத்தும் முயற்சியினை எமது SWDC இன் ஊடகப்பிரிவு முன்னெடுத்துள்ளது.
அதனடிப்படையில் எமது swdc.lk இணையமானது எமது ஊரின் எழுத்துரு ஆக்கங்களை Digital வடிவில் ஆவணப்படுத்தும் ஒரு நூலகத்தை ஆரம்பித்துள்ளது.
நூல்கள், ஆக்கங்கள் எதுவாக இருந்தாலும் எழுத்தாளரின் or வெளியீட்டாளரின் அனுமதியுடன் (Maintaining the intellectual property right of the Author or publisher) ஆவணப்படுத்த உள்ளது.


ஆக்கங்கள் எந்த category ஆகவும் இருக்கலாம்.
1. சம்மாந்துறை பற்றிய ஆவணங்கள்
2. கவிதை தொகுப்புகள்
3. சிறு கதை தொகுப்புகள்
4. ஆண்டறிக்கைகள்
5. அரச, தனியார், NGO வெளியீடுகள்
6. கல்வி சார் நூல்கள் (Eg:- Scholarship, O/L, A/L )
7. Pass papers & model papers
8. Public awareness leaflets.


எனவே உங்களது ஆக்கங்கள் மற்றும் ஏனைய எழுத்தாளர்களின் ஆக்கங்கள் அவர்களது அனுமதியுடன் வழங்கி உதவுமாறு வேண்டுகிறோம்.
ஆக்கங்களை swdc.str@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்..

OUR TEAM

Al-Haj A.L.Joufer Sadique

Chairman

Eng M.T.A.Bawa

General Secretary

Al-Haj M.A.Farook

Vice Chairman 01

Al-Haj M.S.M.Ansar

Joint Secretary – Administration

Prof Ramees Abdullah

Vice chairman 02

Mr Farwis Maharoof

Joint Secretary – Welfare

About Us

Al-Haj A.L.Joufer Sadique

Chairman

About Us

Al-Haj M.A.Farook

Vice Chairman 02

About Us

Al-Haj M.S.M.Ansar

Joint Secretary – Administration

About Us

Prof Ramees Abdullah

Vice chairman 01

About Us

Eng.M.T.A.Bawa

General Secretary

About Us

Mr Farwis Maharoof

Joint Secretary – Welfare

Council Members List

Position

Name

Chairman Mr. A.L. JouferSadique
Vice Chairman I Mr. M.A. Farook
Vice Chairman II Professor Rameez Abdullah,
General Secretary Eng. M.T. Athambawa
Joint Secretary- Administration Mr.M.S.M.Ansar
Joint Secretary- Welfare Mr.FarwisMahroof
Project Manager Mr.M.T.M. Sareem
Planning Manager Eng. K.L.M. Uwais
International Relation Manager Mr.FarwisMahroof
Finance Manager Mr.S.L. Athambawa
Account Manager Mr. M.H.M Arafath
Education Development Sector- Higher Education

Education Development Sector- School Education

Professor. M.I.M. Kaleel

Mr. Azeez Moideen

Welfare Development Sector Mr.A.J.M.Irshad
Culture Development Sector As SheikA.L.M.Rifkan
Health Development Sector Dr. M.M.M. Nowsad
Infrastructure Development & Quality Monitoring Eng. I.L.M.Jawahir
Agriculture and Irrigation Development Sector Eng. M.S.M. Nawas
Personality Development Sector I.M. Fathah
Sports Development Sector Mr. S.L.Saburdeen.
Business and Economic Development Sector  Mr.A. Rasheed
Environment & Disaster Management Sector As SheikM.I.M. Ishaque
Legal Affairs Sector Mr.M.T.M.Sabeer Ahmed
Financial investment & Livelihood Development Sector Mr.M. Siyad
Executive committee Members Dr. A.R.M. Thowfeek

Eng. S.A.Rasheed

Mr.I.M. Haniffa

Eng. A.L.M.Nizar

Mr.A.M.M.Saheed

Dr. A.L.A. Gafoor

Eng.M.L.Haroos Mohamed

SWDC International Heads and Country coordinators

 

 

· UAE & Oman            

– Eng P.T Yousuf Naleer (Head)

· Qatar,KSA,Bahrain & Kuwai

– Eng A.L.M Sahabdeen (Head)   

·Singapore & Malaysia    

– Eng M.M.Sahabdeen (Head)

·Euro  – Mr. S.A Asmath(Head)

·Canada – Eng S.L Musathik

· Australia  – Mr.M.Kaleel

· Qatar   – Mr.S.I.M Buhari Maulavi

· UAE   – Mr.A.Najeem

· KSA – As Shiek F.Rifaj Aslam

· Kuwait – Mr. A.RMohamed Riza

· Oman   – Eng M.T Mubeen     

· Bahrain   –

· Germany –  Mr.M.L Habeeb Najjar

· USA   – Mr. Mubarak( Samsar)

· Japan   – Mr.M.Mohamed Riza

No.316, Bazaar 09th Street,

Sammanthurai-05, Sri Lanka

contact@swdc.lk

or

swdc.str@gmail.com

+94773903436 , +94773700899

No.316, Bazaar 09th Street,

Sammanthurai-05, Sri Lanka