ஏழைகளுக்கான இல்லம் வழங்கும் திட்டம்! Houe for needy. SWDC Sammanthurai. 

SWDC அமைப்பினால் முன்னெடுக்கப்பட்டுவரும் ஏழைகளுக்கான வீடு வழங்கல் திட்டத்தின் முதல் இரண்டு வீடுகளும் இன்று (30/05/2020) பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

செந்நெல் கிராம, கிராம சேவகர் பிரிவில் கொடையாளி ஒருவரினால் வழங்கப்பட்ட காணியில் வீடொன்று 750,000 ரூபா செலவில் அமைக்கப்பட்ட வீடுகளே இவ்வாறு வழங்கப்பட்டன.

இந்நிகழ்வானது SWDC இன் தவிசாளர் AL ஜகுபர் சாதிக் Sir அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு ச.துறை பிரதேச செயலாளர் SLM. ஹனீபா, மஜ்லிஷ் அஷ்ஷூராவின் அமீர் கண்ணியத்துக்குரிய ஆதம்பாவா (மதனி), நம்பிக்கையாளர் சபையின் தலைவர் மதிப்பிற்குரிய மஃறூப் மௌலவி மற்றும் நன்கொடையாளிகள், SWDC இன் நிருவாக உறுப்பினர்கள் மற்றும் பள்ளி நிர்வாகிகள் போன்றோர்கள் கலந்துகொண்டனர்.

இவ்வீடமைப்பு திட்டமானது SWDC இன் உப பிரிவான உள்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இவ்வீடுகளை அமைக்க காணி, பண உதவிகளை புரிந்த அனைத்து கொடையாளிகளுக்கும்
அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் நற்கூலிகளை வழங்குவானாக! ஆமீன்….

இன்னும் பல வீடுகள் அமைக்க வேண்டிய தேவை இருப்பதனால் தனவந்தர்கள, கொடையாளிகள் எம்மை தொடர்பு கொண்டு வழங்க முடியும்.

Media Unit
SWDC- Sri Lanka

SWDC Sammanthurai பற்றி அறிய Click செய்க.