SWDC அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட Covid 19 கூட்டு நிவாரணப்பணி- கட்டம் 3

கொறோனா நோய்த்தொற்றால் வருமானம் இழந்து வீடுகளுக்குள் முடங்கி இருக்கின்ற குடும்பங்களுகான மூன்றாம் கட்ட உலர்உணவு வழங்கும் வைபவம் இன்று (24/04/2020) றமழானை முன்னிட்டு ச.துறை திஷாரதுல் இஸ்லாமிய கலாபீடத்தில் இடம்பெற்றது .

இந்நிகழ்வில் 500 குடும்பங்களுக்கான நிவாரண பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. இதில் அசாதாரண சூழ்நிலையால் வருமானம் இழந்த 300 உலமாக்களுக்கான நிவாரண பொதிகளும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வானது SWDC இன் தவிசாளர் திரு A.L ஜௌபர் சாதிக் அவர்களின் தலைமையில் சம்மாந்துறை மஜ்லிஷ் அஷ்ஷூராவின் கண்ணியத்துக்குரிய அமீர் ஆதம்பாவா (மதனி), நம்பிக்கையாளர் சபையின் பிரதி தலைவர் மதிப்பிற்குரிய மஃறூப் மௌலவி மற்றும் ச.துறை பிரதேச செயலாளர் SLM. ஹனீபா, உப செயலாளர் ஆசிக் மற்றும் SWDC இன் உயர் பேரவையின் உறுப்பினர்களின் பங்கு பற்றுதலுடன் இடம்பெற்றது.

இவ்நிவாரண பொதிகளை பொதியிட SFO, IBM, ICFA, FASD ஆகிய சமூக சேவை அமைப்புக்கள் பங்களிப்பு செய்தமை குறிப்பிடத்தக்கது.

அல்லாஹ் எமது முயற்சிகளை ஏற்றுக்கொள்வானாக! இதற்காக பண உதவி புரிந்த அனைத்து மக்களுக்கும் அல்லாஹ் உயர்ந்த கூலியை வழங்குவானாக! ஆமீன்.

SWDC ஊடகப் பிரிவு

Share this