கொறோனா நோய்த்தொற்றால் வருமானம் இழந்து வீடுகளுக்குள் முடங்கி இருக்கின்ற குடும்பங்களுகான முதற்கட்ட உலர்உணவு வழங்கும் திட்டம் இன்று (14th April  ,2020) சம்மாந்துறை மஜீத்புர கிராமத்தில் இருந்து ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து வளத்தாப்பிட்டி, மல்வத்தை மற்றும் தெரிவு செய்யப்பட்ட சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள 800 குடும்பங்களுக்கு நிவாரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் சம்மாந்துறை முச்சபையின் கௌரவ உறுப்பினர்கள், SWDC உறுப்பினர்கள் பிரதேச செயலாளர் SLM ஹனீபா, உப செயலாளர் மற்றும் பிரதேச செயலக ஊழியர்கள், MOH – Dr S.I.M கபீர் மற்றும் ஊழியர்கள், QSD அமைப்பின் அங்கத்தினர், Al Wasath அமைப்பின் செயலாளர், SFO அமைப்பின் செயலாளர், SHACDA அமைப்பின் தலைவர் மற்றும் நிதி பங்களிப்பு செய்த SECFA,SKY,UCWA,FASD,MUFIAS,
SUSSEX, ICFA, IBM,AL ZEERA போன்ற சமூக சேவை நிறுவனங்களின் உறுப்பினர்களின் பங்கு பற்றுதலுடன் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வானது சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபையின் தலமையின்கீழ் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு உலர் உணவுப் பொதிவழங்கி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அல்லாஹ் எமது முயற்சிகளை ஏற்றுக்கொள்வானாக! இதற்காக பண உதவி புரிந்த அனைத்து மக்களுக்கும் அல்லாஹ் உயர்ந்த கூலியை வழங்குவானாக! ஆமீன்.

SWDC ஊடகப் பிரிவு